‘சாய்ரத்’ படப் பாடல்கள் இணையத்தில் 200 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான மராத்தி படம் ‘சாய்ரத்’. ஆகாஷ் தோசர், ரிங்கு ராஜ்குரு ஆகியோர் நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. ஆணவக் கொலையை அடிப்படையாகக் கொண்ட ‘சாய்ரத்’ இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதுவரை வெளியான மராத்தி மொழிப் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும். இப்படத்தில் புதுமுகங்களாக அறிமுகமான ஆகாஷ் தோசர், ரிங்கு ராஜ்குரு இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அஜய்- அதுல் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் யூடியூப் இணையதளத்தில் இதுவரை 200 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து இரட்டை இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் கூறியுள்ளதாவது:
''இன்றும் ‘சாய்ரத்’ படப் பாடல்களை ரசிகர்கள் விரும்புவதும், பாராட்டுவதும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பாடல்கள் மராத்திய சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் சாதனை புரிந்துள்ளது. இப்பாடல்களுக்கு அதீத அன்பைப் பொழிந்து இதை ஒரு ட்ரெண்ட்செட்டராக மாற்றிய ரசிகர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்''.
இவ்வாறு அஜய்-அதுல் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago