'பிரம்மாஸ்த்ரா' படத்துக்காக 10 டீஸர், 13 மோஷன் போஸ்டர்கள்

By செய்திப்பிரிவு

'பிரம்மாஸ்த்ரா' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது.

இந்தா ஆண்டும் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதால் இன்னும் படப்பிடிப்பு 'பிரம்மாஸ்த்ரா' முடிக்கப்படவில்லை.

இந்நிலையில் 'பிரம்மாஸ்த்ரா' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். 'பிரம்மாஸ்த்ரா' படத்துக்காக 10 டீஸர் கட், 13 மோஷன் போஸ்டர்கள் ஆகியவற்றை தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உருவாகியுள்ளது. இவற்றுக்கு சென்சார் போர்டு அனுமதியும் கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டீஸர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறையும் பட்சத்தில் 'பிரம்மாஸ்த்ரா' படத்தை இந்த ஆண்டே வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்