நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறவில்லை: பாலிவுட் நடிகர் ஷாருக் விளக்கம்

சகிப்பின்மை தொடர்பான தனது கருத்து திரிக்கப்பட்டு விட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக அண்மையில் ஷாருக்கான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித் தன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில் சகிப்பின்மை தொடர்பான தனது கருத்து திரிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷாருக்கான் கூறியதாவது:

நமது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள். அவர்களது எதிர்காலத்துக்கு அறிவுரை கூறும்படி என்னிடம் கேட்டனர். நான் என்ன அறிவுரை வழங்கினாலும், ஜாதி மற்றும் மத ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக் கூடாது என்று தெரிவித்தேன். இதைத் தான் சிலர் திரித்து வெளியிட்டு விட்டனர்.

உண்மையில் நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக நான் கூறவில்லை. அப்படி நான் நினைக்கவும் இல்லை. இந்தியாவை கடவுள் ஆசிர்வதித்து இருக்கிறார். தேசப்பற்றுடன் நான் இருக்கிறேன். என்னை யாராவது தவறாக புரிந்து கொண்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன். ஒவ்வொரு முறையும் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே, இனி சினிமாவை பற்றி மட்டும் கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE