‘ராதே’ படத்தின் மற்றொரு சாதனை

By செய்திப்பிரிவு

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.

ஊரடங்கு தொடர்வதாலும், இனிமேலும் ரசிகர்களைக் காக்க வைக்க முடியாது என்பதாலும் படத்தை மே 13 அன்று ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். விமர்சன ரீதியாகக் கடுமையாக சாடப்பட்டாலும் படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ5 தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு சாதனையையும் ‘ராதே’ திரைப்படம் தக்கவைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் டிவி+ ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் ‘ராதே’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள 65க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்பிள் டிவி+ ஓடிடி தளத்தில் ராதே வெளியாகியுள்ளது.

ஆப்பிள் டிவி+ தவிர்த்து கனடாவின் பெல் ஃபைப் டிவி மற்றும் ஆப்டிக் டிவி, ஆப்பிரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் டிஎஸ் டிவி உள்ளிட்ட தளங்களிலும் ‘ராதே’ வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்