பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இது பாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தற்போது இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் வெப் சீரிஸ் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். அவ்வப்போது தனது தந்தை இர்ஃபான் கான் குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது பாபில் கானின் வழக்கம்.
இந்நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தந்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
நான் தொலைந்து போய் விட்டேன். யாரை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. என் மீது நானே சந்தேகம் கொள்கிறேன். நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன். கடவுளற்ற ஒரு உலகத்தை நினைத்து பயம் கொள்கிறேன். என் மூளை என் இதயத்துடன் யுத்தம் செய்கிறது. நம்பிக்கையின்றி கவனத்துடன் காதலில் விழுகிறேன். இல்லாத ஒன்றுக்காக மனமுடைகிறேன்.
இவ்வாறு பாபில் கான் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago