தில்வாலே படத்தைப் பார்த்து, "நீங்க எப்போதான் நடிக்க கத்துப்பீங்க?' என ரசிகர் கேட்ட கேள்விக்கு மிகவும் நேரடியான யதார்த்தமான பதிலை அளித்துள்ளார் ஷாருக் கான்.
ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் தில்வாலே படம் வெளியானது. தில்வாலேக்கு எதிர்ப்பார்த்த விமர்சனம் இல்லாத நிலையில் ஷாரூக் கானின் தீவிர ரசிகர்கள் படம் தங்களுக்கு தந்த ஏமாற்றத்தை அவரிடம் ட்விட்டரில் நேரடியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தில்வாலே படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஷாருக் கானின் ட்விட்டர் பக்கத்தில், "நீங்க எப்போதான் நடிக்க கத்துப்பீங்க?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். சற்றும் எதிர்பார்க்காத விதமாக இதற்கு ஷாருக் கான் ரசிகரின் விமர்சன ட்வீட்டுக்கு பதில் அளித்தார்.
"நடிப்புக்கு என்று எந்த ஃபார்முலாவும் இல்லை. இறக்கும் வரை நடிக்க கற்றுக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு முடிவே இல்லை." என்று மிகவும் எதார்த்தமான பதிலை அளித்தார்.
ஷாரூக்கின் உடனடி பதிலைக் கண்ட மற்றொரு ரசிகர், "நீங்கள் இப்படியே படங்களை தேர்ந்தெடுக்காமல் நடித்துக் கொண்டிருந்தால் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை இழக்க வேண்டியிருக்கும். உங்களின் மிகப் பெரிய ரசிகனாக இதைக் கூறுகிறேன். தயவுகூர்ந்து கவனித்து நடியுங்கள்" என்றிருந்தார்.
ரசிகரின் பாய்ச்சலுக்கு பதில் அளித்த ஷாரூக், "உங்களை இந்த அளவுக்கு யோசிக்க வைத்ததற்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு நடிகனாக அனைத்துவிதமான கதாப்பாத்திரத்திலும் நான் நடிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
ஷாரூக் கூறிய இந்த நிதான பதில்களை அவரது ட்விட்டர் ஃபாலோயர்கள் ரீ ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago