நடிகை ராக்கி சாவந்த் தாயாரின் புற்றுநோய் சிகிச்சைக்கு நடிகர் சல்மான் கான் உதவியுள்ளார். இதற்கு ராக்கி சாவந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது தாயார் ஜெயா மருத்துவமனையில் இருக்கும் சில காணொலிப் பதிவுகளை ராக்கி சாவந்த், தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "இன்று என் அம்மாவுக்குப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இனி உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம் அம்மா. இந்தப் புற்றுநோய் கட்டி உங்கள் உடலிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும்" என்று அவர் பேசியுள்ளார்.
இந்த சிகிச்சைக்கு நடிகர் சல்மான் கான் உதவியிருப்பதால் அவருக்கு ஜெயா நன்றி தெரிவித்துள்ளார்.
"சல்மான் கானுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். என்னிடம் பணம் இல்லை என்பதால் ஏசுவிடம் பிரார்த்தனை செய்வேன். இதுபோலவே இறந்து போவேன் என்று நினைக்கும்போது இறைவன் அனுப்பிய தேவதையாக சல்மான் கான் என் வாழ்வில் வந்தார். எங்களுக்குத் துணை நின்று இந்த அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார். அவரது மொத்தக் குடும்பமும் என்னோடு நிற்கிறது.
» படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி
» புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிரொலி: தள்ளி வைக்கப்படும் புதுப்படங்கள் வெளியீடு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்றி சல்மான். யாருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்கள் இன்னும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்று ஜெயா பேசியுள்ளார்.
ராக்கி சாவந்த், "உங்களாலும், கடவுளாலும்தான் இப்படி ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடக்கிறது. உலகின் சிறந்த மருத்துவரை அணுக நீங்கள் உதவினீர்கள். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் சல்மான் கான், சொஹைல் கான் போன்ற மகன்கள் இருக்க வேண்டும்" என்று நெகிழ்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago