'ஓ காதல் கண்மணி' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க கரண் ஜோஹருடன் கைகோத்து இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மணிரத்னம் இயக்கிய 'தில் சே' மற்றும் 'ராவணா' இந்தி படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஷாத் அலி(Shaad Ali) இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறார்.
'ஆஷிக்கி 2(AASHIQUI 2 )' படத்தின் ஜோடியான ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். குல்சார் பாடல்கள் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தின் இந்தி ரீமேக்கை மணிரத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago