’தி இண்டெர்ன்’ ரீமேக்கில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

’தி இண்டெர்ன்’ ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு வெளியாகியுள்ளது.

2015-ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன் ஹாத்வே நடித்த படம் ’தி இண்டர்ன்’. 70 வயது ஆண் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற வாழ்க்கை சுவாரசியமின்றி செல்வதால், ஆன்லைன் ஃபேஷன் விற்பனை நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெறுபவராக வேலைக்குச் சேர்கிறார். இவருடன் இன்னும் மூன்று பேரும் அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற சேர்கின்றனர். வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் அவர், அங்கிருக்கும் இளைஞர்களுக்கு நிறைய ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவர் அங்குப் பயிற்சி பெறும் நாட்களில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இந்தப் படம்.

கிட்டத்தட்ட 194 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் பாராட்டுகளைப் பெற்றனர். இதில் பயிற்சி பெறும் முதியவராக ராபர்ட் டி நிரோவும், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆன் ஹாத்வேவும் நடித்திருந்தனர். இந்தி ரீமேக்கில் முறையே அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனும் நடிக்கின்றனர்.

முன்னதாக அமிதாப் பச்சனுக்கு பதில் ரிஷி கபூர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் காலமானதால் இந்தப் படம் குறித்த மேற்கொண்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இதுகுறித்து தீபிகா படுகோன் போஸ்டர் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளார். 'மீண்டும் எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் இணைந்து நடிப்பதில் கவுரவம்' என்று தீபிகா இந்தப் பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், தீபிகா படுகோனின் கா தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்குகிறார். 2022 கோடையில் படம் வெளியாகு என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கதாபாத்திரங்களில் தான் முறையே ரிஷி கபூரும், தீபிகாவும் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தீபிகாவின் கா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்