அமிதாப், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘செஹ்ரே’ படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடித்துள்ள படம் ‘செஹ்ரே’. ரூமி ஜாஃப்ரி இயக்கியுள்ள படத்தில் ரியா சக்ரவர்த்தி, அன்னு கபூர், கிரிஸ்டல் டிசோஸா, ரகுபீர் யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதிக்கு இப்படத்தின் வெளியீட்டைப் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.
தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது குறித்து அம்மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகின்றன.
» மொழி எப்போதும் எனக்கு ஒரு தடை இல்லை: நடிகர் ராணா பகிர்வு
» 'கோடியில் ஒருவன்' படப் பாடலுக்கு வரவேற்பு: அருண் பாரதி நெகிழ்ச்சி
இந்நிலையில் ‘செஹ்ரே’ படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஆனந்த பண்டிட் கூறியுள்ளதாவது:
''இந்தச் சூழலில் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். எனவே இதனைக் கருத்தில் கொண்டு ‘செஹ்ரே’ படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்கிறோம். மிகுந்த சிரத்தை எடுத்து எங்கள் குழுவினர் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். திரையரங்குகளுக்குப் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் வரும் நாளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்''.
இவ்வாறு ஆனந்த பண்டிட் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago