அட்லி - ஷாரூக்கான் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இந்தியில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் அட்லி. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் ஷாரூக்கான். அவரோடு இணைந்து கரண் ஜோஹரும் இந்தப் படத்தைத் தயாரிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான பணிகளை நீண்ட மாதங்களாகக் கவனித்து வருகிறார் அட்லி.

அவ்வப்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அட்லியின் கதையைக் கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் ஷாரூக்கான். அந்தக் கதைக்கான அட்லியின் திரைக்கதையை அமைப்பையும் ஷாரூக்கான் ஓ.கே. செய்துவிட்டார்.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஷாரூக்கான். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அட்லி படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஷாரூக்கான்.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது. ஷாரூக்கான் உடன் நடிக்கவுள்ளவர்களை இறுதி செய்து, ஒப்பந்தம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் அட்லி - ஷாரூக்கான் கூட்டணி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்