பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது. இந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கார்த்திக், தான் குணமாகப் பிரார்த்தனை செய்யுமாறு தன் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் விரைவில் நலம் பெற வேண்டிப் பலரும் அவருக்குப் பின்னூட்டத்தில் வாழ்த்தி வருகின்றனர்.
கார்த்திக் ஆர்யன் 'பூல் புலைய்யா 2' திரைப்படத்துக்கான படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில் கியாரா அத்வானி, தபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தபுவைக் கிண்டல் செய்து அண்மையில் கார்த்திக் ஆர்யன் பதிவிட்டிருந்தார். மேலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவுக்காக லேக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியிலும் கார்த்திக் ஆர்யன் கலந்துகொண்டார்.
இதுதவிர ஓடிடியில் வெளியாகவுள்ள 'தமாகா' திரைப்படத்திலும் கார்த்திக் ஆர்யன் தொலைக்காட்சி வர்ணனையாளராக நடிக்கிறார்.
» வார்த்தைகளால் விவரிக்க முடியாது: 4-வது முறை தேசிய விருது வென்ற கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, சித்தாந்த் சதுர்வேதி, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago