'லால் சிங் சட்டா' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நாக சைதன்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கவர்ந்தது.
5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.
கரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட தேதிகள் பிரச்சினையால், 'லால் சிங் சட்டா' படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. இந்நிலையில், இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள், தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
» ஓடிடியில் வெளியாகும் 'பரமபதம் விளையாட்டு'?
» மக்கள் வருகை குறைவு; மூடப்படும் திரையரங்குகள்: திரையரங்க உரிமையாளர்கள் வேதனை
இந்தச் செய்தி தொடர்பாக நாக சைதன்யாவும் எதுவுமே தெரிவிக்கவில்லை என்பதால், இது உண்மையாக இருக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒட்டுமொத்தப் பணிகளையும் முடித்து, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'லால் சிங் சட்டா' படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago