இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு இன்று பிறந்தநாள். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது குடும்பத்தினரோடு 50-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அதிகாலையிலிருந்து முகநூல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் வரும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் திக்குமுக்காடி வருகிறார்.
ரசிகர்களின் இதயத்தில் ராஜசிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஷாரூக்கின் அன்பு வெறிபிடித்த ரசிக நெஞ்சங்களுக்காகவென்றே 'ஃபேன்' (FAN) படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஃபேன் திரைப்படம் 2016 ஏப்ரலில் வெளிவர உள்ளது. ஆனால், இன்று வெளியாகி உள்ள டீசரைப் பார்த்தால் அவரின் ரசிகர்கள் அப்படம் வரும்நாள்வரை எப்படி பொறுமையோடு காத்துக்கொண்டிருப்பது சிரமம்தான் என்று தோன்றுகிறது.
ஃபேன் படத்தின் டீசர் காட்சிகளில் அந்த அளவுக்கு பளிச்சிடும் புதிய பரிமாணத்தோடு தோன்றுகிறார் ஷாரூக். ரசிகனை கவர்ந்திழுத்த அபிமான நட்சத்திரமாகவும் ஸ்டைலான நடிகன்மீது கட்டுப்பாடில்லாமல் அன்பு வைத்திருக்கும் ஒரு ரசிகனாகவும் அவரே தோன்றியுள்ள பாத்திரங்கள் நம் கண்ளை கூச வைக்கின்றன. தெறிக்கும் நடிப்பாற்றலில் ரசிகனை சுண்டியிழுத்து படம் எப்படி இருக்கப்போகிறதோ என்று பொறுமையை சோதிக்கின்றன.
''இன்று எனக்கு 50 ஆகிறது. ஆனால் 25-க்கு திரும்பிவிட்டேன். எல்லா வருடங்களும் எனக்கு அன்பை வாரி வழங்கினீர்கள்.. நானும் இதயபூர்வமாக எனது படைப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன்... கவுரவ் ஒரு ரசிகன்... நீங்களும் நானும் ஒரு நம்பிக்கையாக திகழ்கிறோம்....'' என்று முகநூலில் தனது பிறந்தநாள் முன்னிட்டு ஷாரூக்கான் பதிவிட்டுள்ள வாசகத்தின் நிஜம் டைனமிக்கான இந்த டீசரைப் பார்க்கும்போதுதான் மேலும் வலுப்படுகிறது...
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago