ஷாரூக்கான் மற்றும் ஆலியா பட் இணைந்து 'டார்லிங்க்ஸ்' என்னும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இந்தி திரையுலகினி முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக்கான், தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தை அவருடைய மனைவி கெளரி கான் நிர்வாகித்து வருகிறார். தற்போது ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளது.
'டார்லிங்க்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜாஸ்மீட் கே ரீன் இயக்கவுள்ளார். இதில் ஆலியா பட், ஷிஃபலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேதீவ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். டார்க் காமெடி பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது.
'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'டார்லிங்க்ஸ்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆலியா பட். இது அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படமாகும். தொடர்ச்சியாக இதர நடிகர்கள் நடிக்கும் படத்தையும் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் ஆலியா பட்.
» ரன்பீர் கபூரின் 'அனிமல்' வெளியீட்டுத் தேதி முடிவு
» டாம் ஹாலண்டுக்காக சோனியுடன் சண்டை போட்டோம் - ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் பேட்டி
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago