சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வாங்கா. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூலையும் குவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் தயாரானது. 'கபீர் சிங்' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வாங்காவே இயக்கியிருந்தார். இந்தப் படம் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்த படத்துக்கு இந்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. 'அனிமல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், பாபி தியோல், பரினீதி சோப்ரா உள்ளிட்ட பலர் ரன்பீர் கபூருடன் நடிக்கவுள்ளனர். இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'அனிமல்' படத்தின் படப்பிடிப்பில் ரன்பீர் கபூர் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, 2022-ம் ஆண்டு தசரா விடுமுறைக்கு 'அனிமல்' வெளியாகும் எனப் படக்குழுவினர் இப்போதே அறிவித்துள்ளனர். முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தை பூஷண் குமார், பிரணய் ரெட்டி வாங்கா, கிருஷ்ணன் குமார் மற்றும் முரத் கீதானி ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago