இந்தியில் ரீமேக் ஆகும் இருமுகன்

By செய்திப்பிரிவு

விக்ரம் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'இருமுகன்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. விக்ரம் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இருமுகன்'. ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் நல்ல வசூல் பெற்று வெற்றியடைந்தது.

ஸ்பீட் என்கிற போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 5 நிமிடம் அசாத்தியமான சக்தி கிடைக்கும். இந்த மருந்தை வில்லன் தீவிரவாதிகளுக்கு விற்க, அதை நாயகன் எப்படித் தடுக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கரு.

இந்தப் படம் இதர மொழிகளில் ரீமேக் செய்யப்படாமலேயே இருந்தது. தற்போது இதன் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அதில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தி ரீமேக்கையும் ஆனந்த் ஷங்கரே இயக்கவுள்ளார். தற்போது விஷால் - ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்துவிட்டு, 'இருமுகன்' இந்தி ரீமேக் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்