போர்க்களம்தான் என் உண்மையான காதலன்: கங்கணா ட்வீட்

By ஐஏஎன்எஸ்

போர்க்களம்தான் என்னுடைய ஒரே உண்மையான காதலன் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

ரஜ்னீஷ் கை இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடித்து வரும் படம் ‘தாக்கட்’. சொஹைல் மக்லாய் மற்றும் அசைலம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் திவ்யா தத்தா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''சண்டையில் ஆறுதல் தேடுவது என்பது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். வாள்களின் சத்தங்களுக்கு இடையே காதலில் விழுவது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பொறுத்தவரை போர்க்களம் என்பது ஒரு மோசமான உண்மை. ஆனால், யுத்தம் செய்யப் பிறந்த ஒருவருக்கு இவ்வுலகில் வேறு இடம் கிடையாது.

இது துடிப்பான ரத்தம் கொண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம். என்னுடைய போர்க்களம்தான் என்னுடைய ஒரே உண்மையான காதலன். அந்த ஒரே இடம் மட்டும்தான் நான் வேறு இடமாக உணராத ஒரே இடம்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

கங்கணா நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘தலைவி’ திரைப்படம் வெளியாகவுள்ளது. ‘தேஜஸ்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர ‘மணிகர்ணிகா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து நடிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்