2016ஆம் ஆண்டு கண்மணி இயக்கத்தில் வெளியான படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இப்படத்தில் ஜீவரத்னம், தம்பி ராமையா, மனோபாலா, ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடிகை கெஹானா வசிஸ்த் நடனம் ஆடியிருந்தார்.
இவரது இயற்பெயர் வந்தனா திவாரி. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃப்லிமி துனியா’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளனர்.
இதுவரை 19 திரைப்படங்கள் மற்றும் சில வெப் தொடர்கலில் நடித்துள்ள கெஹானா வசிஸ்த் கரோனா ஊரடங்கில் திரைப்பட வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (07.02.21) மும்பையின் மலாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீஸார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது நடிகை கெஹானா வசிஸ்த் மற்றும் அவரோட இருந்த இரண்டு நடிகர்கள், கேமராமேன், எடிட்டர், ஒரு இளம்பெண் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
» சர்வதேச விருது வென்ற ‘கூழாங்கல்’- விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி
» பிரச்சினைகளுக்குத் தீர்வு: 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்ததில் கெஹானா வசிஸ்த் இதுவரை 87 ஆபாசப்படங்களை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago