பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மும்பை படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விபத்துப் பகுதியில் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும், காயமும் ஏற்படவில்லை.
இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தான் மும்பையில் தொடங்கியது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது.
இப்படத்தில் சர்வதேச கிராபிக்ஸ் நிறுவனங்களைக் கொண்டு அதி நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை உருவாக்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
» 10,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு
» ஸ்பானிஷ் திரைப்பட ரீமேக்கில் ஆர்.எஸ்.பிரசன்னா - ஆமிர் கான் இணை?
இந்நிலையில் இன்று முதல் ‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு தொடங்குவதாகப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்திருந்தார். இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்தார். இது தொடர்பாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.
அதேபோல் நடிகர் பிரபாஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஆரம்ப்' (ஆரம்பம்) எனப் பதிவிட்டிருந்தார். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய பொருட்செலவில், மிகப் பிரம்மாண்டமாக, பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago