ஸ்பானிஷ் திரைப்பட ரீமேக்கில் ஆர்.எஸ்.பிரசன்னா - ஆமிர் கான் இணை?

By செய்திப்பிரிவு

'காம்பியோனெஸ்' என்கிற ஸ்பானிஷ் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னாவுடன் நடிகர் ஆமிர் கான் ஆலோசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் 2013ஆம் ஆண்டு 'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.எஸ்.பிரசன்னா. தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'ஷுப் மங்கள் சாவ்தான்' திரைப்படத்தையும் இயக்கினார். இதன் பிறகு ஆர்.எஸ்.பிரசன்னா எந்தப் படமும் இயக்கவில்லை. தற்போது ஆமிர் கான் நாயகனாக நடிக்க 'காம்பியோனெஸ்' என்கிற ஸ்பானிஷ் திரைப்படத்தை இயக்குவது குறித்து பிரசன்னா ஆலோசித்து வருகிறார்.

2018ஆம் ஆண்டு வெளியான 'காம்பியோனெஸ்' கூடைப்பந்து பயிற்சியாளர் ஒருவரைப் பற்றிய படம். மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணிக்குப் பயிற்சியளிக்க, மதுவுக்கு அடிமையான, திமிர் பிடித்த ஒரு பயிற்சியாளர் ஒருவரைப் பற்றிய கதை இது. ஆனால், இந்தப் படம் விளையாட்டைப் பற்றி அதிகம் பேசாமல் அந்த அணிக்குத் தரப்படும் பயிற்சி, அதில் நடக்கும் நகைச்சுவை ஆகியவை பற்றியே இருக்கும். அந்த வருடம் உள்நாட்டில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படமாக 'காம்பியோனெஸ்' இருந்தது.

இதில் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்கவிருக்கிறார். கூடைப்பந்து விளையாட்டு நமது நாட்டில் அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் வேறொரு விளையாட்டைப் பின்னணியாக வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குநரும், நாயகனும் ஆலோசித்து வருகின்றனர். இதுவரை 5-6 முறை இவர்களுக்கிடையே சந்திப்பு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது 'ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கான 'லால் சிங் சட்டா'வில் ஆமிர் கான் நடித்து வருகிறார். இதன் பிறகு குல்ஷன் குமாரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'மொகல்' என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன்பிறகே 'காம்பியோனெஸ்' ரீமேக் பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்