நடிகர் அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் 'மே டே' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அமிதாப் பச்சன், முதல் சில நாட்கள் தனக்கு என்றுமே பதட்டத்தைத் தருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் படப்பிடிப்புத் தளத்தில் காரிலிருந்து கீழே இறங்குவது போன்ற புகைப்படத்தை அமிதாப் பகிர்ந்துள்ளார். இதோடு "ஆண்டவா. புதிய திரைப்படங்களின் முதல் சில நாட்கள் படப்பிடிப்பு என்றுமே எனக்குக் கெட்ட கனவைப் போலத்தான். தொடர் பயத்தில், அதிர்ச்சியில் இருக்கிறேன். என்ன நடக்குமோ, நாம் நடிப்பதை ஏற்றுக்கொள்வார்களோ என்று பதறுகிறேன். ஓடி ஒளிய வேண்டும் என்று தோன்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே விஷயத்தை ட்விட்டரிலும் அமிதாப் பகிர, அவருடன் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், தான் தான் பெரிய நட்சத்திரம் ஒருவருடன் நடிப்பதில் பதட்டமாக வேண்டும் என்று பதிலளித்தார்.
» அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கும் ராஷ்மிகா
» அஜய் தேவ்கன் - அமிதாப் படத்தில் நடிகராக அறிமுகமாகும் 21 வயது யூடியூப் பிரபலம்
அமிதாப், ரகுல், அங்கிரா தர் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குவதோடு தயாரிக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கன். ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அமிதாப்பின் கதாபாத்திரம் குறித்து ரகசியம் காக்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பிரபல யூடியூப் நட்சத்திரமான அஜய் நகரும் அறிமுகமாகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் இது தவிர, ரூமி ஜாஃப்ரி இயக்கும் 'செஹ்ரே', சூப்பர் ஹீரோ திரைப்படமான 'பிரம்மாஸ்திரா', மராத்திய இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் 'ஜுந்த்' ஆகிய திரைப்படங்களிலும் நடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago