பாலிவுட் நடிகர் வருண் தவான், தனது திருமணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர் ராஜேஷ் டலாலின் மகள் நடாஷா டலால். வருண் தவானும், நடாஷாவும் பள்ளிக் காலத்திலிருந்து நண்பர்கள். ஃபேஷன் டிஸைனிங் படித்துப் பட்டம் பெற்றுள்ள நடாஷா, அவரது பெயரில் தனியாக ஜவுளி ரகம் ஒன்றைத் தயாரித்து, வியாபாரம் செய்து வருகிறார்.
வருண் தவான் நடிக்க வந்த காலத்திலிருந்தே அவரும் நடாஷாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து வருண் என்றும் பேசியதில்லை. தொடர்ந்து மவுனம் காத்துவந்த வருண் தவான், திடீரென்று திருமண அறிவிப்பை வெளியிட்டார்.
அலிபாக்கில் ஞாயிற்றுக்கிழமை அன்று நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சூழ நடந்த இந்தத் திருமணத்தின் இரண்டு புகைப்படங்களை வருண் பகிர்ந்துள்ளார். இதோடு, ’வாழ்நாள் காதல் துணை, இப்போது அதிகாரபூர்வமாக மாறியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
» அமிதாப் பட ரீமேக்கில் நடிக்கிறேனா? - வருண் தவான் விளக்கம்
» கரோனா குறித்து நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்: வருண் தவான்
பிரபலங்கள், சக பாலிவுட் கலைஞர்கள் பலரும் வருணுக்குத் தங்கள் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கரண் ஜோஹர், குணால் கோலி உள்ளிட்ட ஒருசில திரையுலக நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். திருமணம் நடந்த இடத்துக்கு வெளியே காத்திருந்த எண்ணற்ற ஊடகத்தினருக்கு திருமண வீட்டார் இனிப்புகள் வழங்கினர்.
அலிபாக்கில், மேன்ஷன் ரிசார்ட்டில் ஜனவரி 22ஆம் தேதி முதலே திருமணச் சடங்குகள் தொடங்கி கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago