தமிழில் வரவேற்பு பெற்ற 'மாஸ்டர்' திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி பொங்கல் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் எந்தவொரு குறையுமே இல்லை. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பதாவது:
» விமர்சித்தவருக்கு மாதவனின் பக்குவ பதில்: இணையத்தில் வைரல்
» ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்: தணிக்கைத் துறைத் தலைவர் கருத்து
" ’மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்".
இவ்வாறு அபிஷேக் ரெகே கூறியுள்ளார்.
இந்தி ரீமேக்கை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இதன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இன்னும் இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இறுதியாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago