ரன்பீர் கபூர் படத்தின் இணையும் அனில் கபூர், பரினீதி சோப்ரா

By செய்திப்பிரிவு

'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. தெலுங்கைப் போலவே இந்தியில் இவர் இயக்கிய முதல் படமும் 'அர்ஜுன் ரெட்டி'யின் ரீமேக்கான 'கபீர் சிங்'தான். இதுவும் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. 278 கோடி ரூபாய் வசூலுடன் இந்தி ரீமேக்கின் நாயகனான ஷாகித் கபூரை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியது.

இதனால் பாலிவுட்டில் கவனம் பெற்ற சந்தீப் ரெட்டி, உடனடியாக ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும், தீவிரமான ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதலில் 'டெவில்' என்று பெயரிடப்பட்டிருந்த இப்படம் ‘அனிமல்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வரும் ஜனவரி 1ஆம் தேதி அன்று 12.01 மணிக்கு படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரன்பீர் கபூருடன் அனில் கபூர், பாபி தியோல், பரினீதி சோப்ரா, உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வரும் 2021ஆம் ஆண்டின் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் பூஷன் குமார் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்