தனது தாயின் அறக்கட்டளையால் கட்டப்பட்ட மதுரைப் பள்ளிக்கு உதவுமாறு பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நேற்று (23.12.20) மதுரையில் அமைந்துள்ள ஒரு பள்ளி தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிருந்திருந்தார். அத்துடன் ஒரு பதிவையும் எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
என்னுடைய தாய் மற்றும் அவரது அற்க்கட்டளையால் கட்டப்பட்ட ஒரு பள்ளியை பற்றி உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மதுரையில் உள்ள மவுண்டைன் வியூ பள்ளி வெற்றிகரமான முறையில் ஏழை குழந்தைகளுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வியை பயிற்றுவித்து வருகிறது. நான்காம் வகுப்பு வரை கொண்ட இப்பள்ளியில் 200 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் 14 வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய தேவை இப்பள்ளிக்கு ஏற்பட்டுள்ளது.
இன்னும் அதிகமான குழந்தைகள் தங்களுடைய கனவை நிறைவேற்ற நாம் நம்முடைய சிறிய பங்கை அளிப்போம். நாம் இப்போது இருக்கும் கடினமான சூழலை கருத்தில் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது இப்போது மிகவும் அவசியமானதாகிறது.
» ஜனவரியில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடக்கம்
» காதல் மன்னன் நூற்றாண்டு: ஜெமினி கணேசனின் மகன் சதீஷ் சிறப்புப் பேட்டி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago