ரன்பீர் கபூர் - சந்தீப் ரெட்டி வாங்கா திரைப்படத்தின் தலைப்பு மாற்றம்

By செய்திப்பிரிவு

நடிகர் ரன்பீர் கபூர் - இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இணையின் திரைப்படப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. தெலுங்கைப் போலவே இந்தியில் இவர் இயக்கிய முதல் படமும் 'அர்ஜுன் ரெட்டி'யின் ரீமேக்கான 'கபீர் சிங்'தான். இதுவும் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. 278 கோடி ரூபாய் வசூலுடன் இந்தி ரீமேக்கின் நாயகனான ஷாகித் கபூரை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியது.

இதனால் பாலிவுட்டில் கவனம் பெற்ற சந்தீப் ரெட்டி, உடனடியாக ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும், தீவிரமான ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்துக்கு 'டெவில்' என்று பெயரிடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே ரன்பீர் கபூர் 'ஷம்ஷேரா', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கரோனா பிரச்சினையால் இந்தப் படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் 'டெவில்' ஆரம்பிக்கப்படவில்லை. இது தவிர, இயக்குநர் லவ் ரஞ்ஜன் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூருடனும் ஒரு படத்தில் ரன்பீர் நடிக்கிறார். இதன் வேலை அடுத்த வருடம் மே மாதம் வரை நீள்கிறது. எனவே இந்த மூன்று படங்களின் வேலைகளும் முடிந்த பிறகு ரன்பீர், 'டெவில்' பணிகளைத் தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது 'டெவில்' என்கிற தலைப்பு 'அனிமல்' என்று மாற்றம் கண்டுள்ளது. இதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானும் ஒரு வகையில் காரணமாக அமைந்துள்ளார். சல்மான் கான் நடிப்பில் வெளியான 'கிக்' திரைப்படத்தில், சல்மான் 'டெவில்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் பிரபலமானதால் 'கிக்' இரண்டாம் பாகத்துக்கு 'டெவில்' என்கிற தலைப்பை வைக்கத் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா முடிவு செய்து, அந்தத் தலைப்பை பதிவும் செய்துள்ளார்.

ரன்பீர் படத்துக்கு 'டெவில்' தலைப்பை அவர் விட்டுக்கொடுக்க மறுத்துள்ளதால், படக்குழு 'அனிமல்' என்கிற புதிய பெயரைத் தேர்வு செய்துள்ளது. 'கிக்' திரைப்படமும் தெலுங்கில் அதே பெயரில் ரவி தேஜா நாயகனாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்