இந்தியில் ரீமேக் ஆகும் 'ஃபாரன்ஸிக்’ - விக்ராந்த் மாஸி நடிக்கிறார்

By செய்திப்பிரிவு

டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஃபாரன்ஸிக்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்த ஆண்டு ஊரடங்குக்கு முன்பு, பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ஃபாரன்ஸிக்'. த்ரில்லர் திரைப்படமான இதில் டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விமர்சர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை, பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஆஹா ஓடிடி தளம் வாங்கி, தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டது.

தற்போது இந்தத் திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. மினி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் நடித்த கதாபாத்திரத்தில், 'ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட்’, ’சப்பாக்’ உள்ளிட்ட படங்களிலும், மிர்ஸாபூர், மேட் இன் ஹெவன் உள்ளிட்ட வெப் சீரிஸிலும் நடித்த விக்ராந்த் மாஸி நடிக்கிறார்.

புத்திசாலித்தனமான 'ஃபாரன்ஸிக்' திரைப்படம் பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் இருப்பதாகக் கூறியிருக்கும் மாஸி, இந்தி ரீமேக்கில் நாயகனாக நடிப்பதிலும், மினி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் பணியாற்றுவதிலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோரே இந்தியிலும் படத்தை இயக்குகின்றனர். இந்தப் படத்தைப் பற்றிப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் மான்ஸி பக்லா, "இந்தித் திரைப்படங்களில் வழக்கமாகக் காவல்துறை அதிகாரிகளைப் பார்ப்போம். ஒரு குற்றத்தை விசாரணை செய்யும் ஃபாரன்ஸிக் அதிகாரி கதாபாத்திரத்தைத் திரைப்படங்களில் பார்த்ததில்லை. எனவே விக்ராந்த் இந்த கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாக இருக்கிறார். அவரை ஒப்பந்தம் செய்ததில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

படத்தைப் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்