ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்

By செய்திப்பிரிவு

ஆமிர்கான் நடித்து வரும் 'லால் சிங் சட்டா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது.

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆமிர்கான். 'சங்கத்தமிழன்' படத்தின் படப்பிடிப்புக்கு இடையேதான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

முதலில் 'லால் சிங் சட்டா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. ஆனால், பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் தேதிகள் பிரச்சினையால் தற்போது விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்