கரோனா குறித்து நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்: வருண் தவான்

By ஐஏஎன்எஸ்

கரோனா தொற்று குறித்து தான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

1995ஆம் ஆண்டு கோவிந்தா, கரிஷ்மா கபூர் நடிப்பில் வெளியான படம் ‘கூலி நம்பர் 1’. இப்படம் தற்போது அதே பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவான், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை டேவிட் தவானே மீண்டும் இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜ் மேத்தா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜக் ஜக் ஜீயோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வருண் தவான். இதற்கான படப்பிடிப்பு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் வருண் தவானுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘ஜக் ஜக் ஜீயோ’ படிப்பிடிப்பின்போதுதான் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று குறித்து தான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருண் தவான் கூறியுள்ளதாவது:

''தொற்றுக் காலத்தில் படப்பிடிப்புக்குச் சென்ற எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டபோதும் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது குறிப்பாக கரோனா விஷயத்தில். எனவே தயவுசெய்து கூடுதல் கவனத்துடன் இருங்கள். நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்''.

இவ்வாறு வருண் தவான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்