'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘ராதே’. இப்படத்தில்
திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஹாக்கி ஷெராஃப், பரத் ஆகியோர் நடிக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' ('போக்கிரி') திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படம், 'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்
‘ராதே’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாகவும், முன்னணி ஓடிடி தளங்களிடம் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் ‘ராதே’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும், அப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் தீர்மானமாக இருப்பதாகவும் படக்குழுவினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் ‘ராதே’ திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
» ‘அரவிந்த சமேதா’ எப்போதும் எனக்கு விசேஷமான திரைப்படம்: பூஜா ஹெக்டே
» ‘பாலிவுட் வைவ்ஸ்’ தலைப்பு விவகாரம்: கரண் ஜோஹரை சாடும் இயக்குநர் மதூர் பந்தர்கர்
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த ‘ராதே’ திரைப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘ராதே’ படத்தைத் தொடர்ந்து ‘கிக் 2’ மற்றும் ‘கபி ஈத் கபி தீவாளி’ ஆகிய படங்களில் சல்மான்கான் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago