அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் - ‘ராம் சேது’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லக்‌ஷ்மி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, தமிழில் இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இந்தியிலும் இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் படத்தின் தலைப்பு இந்து கடவுளான லக்‌ஷ்மியை அவமதிப்பது போல உள்ளது என்று பலரும் விமர்சித்த நிலையில் படத்தின் பெயர் ‘லக்‌ஷ்மி’ என்று மாற்றப்பட்டது,

கடந்த 9-ம் தேதி டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. மோசமான திரைக்கதை மற்றும் பாத்திர வடிவமைப்பு என்று பலரும் இப்படம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார். ‘ராம் சேது’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனது சமூக வலைதளங்களில் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரை வெளியிட்டு அக்‌ஷய்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த தீபாவளி பண்டிகையில், எதிர்கால தலைமுறையினரை இணைக்கக் கூடிய ஒரு பாலத்தை கட்டமைப்பதன் மூலம் அனைத்து இந்தியர்களின் மனதில் ராமரின் கொள்கைகளை உயிரோடு வைத்திருக்க முயற்சி செய்வோம். இந்த மகத்தான பணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது எங்களின் பணிவான ஒரு முயற்சி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘லக்‌ஷ்மி' படத்துக்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்பவே அக்‌ஷய்குமார் அவசரமாக தனது அடுத்த பட போஸ்டரை வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்