இயக்குநர் ரோஹித் ஷெட்டி, அடுத்த ரன்வீர் சிங்கை நாயகனாக வைத்து இயக்கவிருக்கும் ’சர்க்கஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கும் மெஹ்பூபா ஸ்டூடியோஸை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.
சிம்பா திரைப்படத்துக்குப் பின் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'சர்க்கஸ்' திரைப்படத்தின் ரன்வீர் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இது குல்ஸார் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான 'அங்கூர்' என்கிற இந்திப் படத்தின் சமகால ரீமேக் எனத் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யாஷ் ராஜ் ஸ்டூடியோவிலும் அடுத்தது பாந்த்ரா பகுதியில் இருக்கும் மெஹ்பூப் ஸ்டூடியோவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. தற்போது அங்கு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஹைதராபாதின் ராமோஜி ராவ் ஸ்டூடியோவிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கோவா ரோஹித் ஷெட்டிக்கு ராசி என்று பார்க்கப்படுவதால் அங்கும், ஊட்டியிலும் கூட சில நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
பிறக்கும் போதே பிரிந்து போன இரண்டு ஜோடி இரட்டையர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும்போது நடக்கும் நகைச்சுவைக் குழப்பங்களே இந்தப் படம். டி சீரிஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்மெண்ட்ஸ் மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago