ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரஹ்மான் இசையில் தனுஷ் பாடவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'ராஞ்சனா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூலமே, இந்தித் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அதற்குப் பிறகு 'ஷமிதாப்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.
தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இதில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.
'அத்ரங்கி ரே' படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் ‘நமது இசைப்புயலுடன் அரட்டை அடிப்பதும் பாடுவதும் மகிழ்ச்சி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், தனுஷ் தரப்போ அல்லது ஏ.ஆர். ரஹ்மான் தரப்போ இதை இன்னும் உறுதி செய்யவில்லை.
தனுஷ் நடித்த ‘மரியான்’, 'ராஞ்சனா' ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் இதுவரை அவரது இசையில் தனுஷ் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago