தசரா பண்டிகை: அலுவலக ஊழியருக்கு சொகுசுக் காரைப் பரிசளித்த நடிகை ஜாக்குலின்

By ஐஏஎன்எஸ்

தசரா பண்டிகையை முன்னிட்டு தனது அலுவலக ஊழியருக்கு சொகுசுக் காரைப் பரிசளித்துள்ளார் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.

2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்றவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அலாதீன்’ இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘மர்டர் 2’, ‘ஹவுஸ்ஃபுல் 2’, ‘ரேஸ் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சல்மான் கானுடன் இவர் நடித்த ‘கிக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு தனது அலுவலக ஊழியருக்கு சொகுசுக் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் ஜாக்குலின். இது தொடர்பான வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், தனது புதிய படத்துக்காக டிராபிக் போலீஸ் உடையில் இருக்கிறார் ஜாக்குலின். அப்படத்தின் படப்பிடிப்பின் இடையே தனது ஊழியருக்கு காரைப் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரித்தபோது, அந்த ஊழியர் ஜாக்குலினின் முதல் படத்திலிருந்து அவரது அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மேக்கப் கலைஞருக்கும் இதேபோல ஒரு சொகுசுக் காரை ஜாக்குலின் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சல்மான் கான் நடிக்கும் ‘கிக் 2’ மற்றும் ‘பூத் போலிஸ்’, ‘சர்க்கஸ்’ ஆகிய படங்களில் ஜாக்குலின் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்