‘தேஜஸ்’ படத்துக்காக விமானப் பயிற்சியைத் தொடங்கிய கங்கணா

By ஐஏஎன்எஸ்

‘தேஜஸ்’ படத்துக்கான விமானப் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது என்று கங்கணா தெரிவித்துள்ளார்.

சர்வேஷ் மேவரா இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடித்து வரும் புதிய படம் ‘தேஜஸ்’. 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்காக கடுமையான பயிற்சிகளைக் கங்கணா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோவை கங்கணா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘தேஜஸ்’ படக்குழுவினர், படத்துக்கான விமானப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர். திறமை வாய்ந்த இயக்குநரான சர்வேஷ் மேவரா மற்றும் எங்கள் பயிற்சியாளரான அபிஜித் கோகலே ஆகியோருடன் பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

சர்வேஷ் மேவரா இயக்கும் 'தேஜஸ்', இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 2021 வெளியீடு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்