அரேபியக் கடலைப் பார்த்தவாறு இருக்கும் இரண்டு வீடுகளை நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.97.5 கோடி.
ஒன்று டூப்ளெக்ஸ் பென்ட் ஹவுஸ் வகையிலும், இன்னொன்று ஒற்றை மாடி வீடாகவும் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. மும்பையின் ஜூஹூ - வெர்சோவா இணைப்புச் சாலையில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 14, 15 மற்றும் 16-வது தளங்களில் ஹ்ரித்திக் வீடுகள் அமைந்துள்ளன.
அரேபியக் கடலைப் பார்த்தவாறு இருக்கும் இந்த வீடுகளன் மொத்த அளவு 38,000 சதுர அடி. மொட்டை மாடி 6,500 சதுர அடி. ஹ்ரித்திக்குக்கென மொத்தம் 10 பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 27,534 சதுர அடி இருக்கும் டூப்ளெக்ஸ் இல்லத்தை ரூ.67.5 கோடிக்கும், 11,165 சதுர அடி இருக்கும் 14-வது மாடியில் இருக்கும் இல்லத்தை ரூ.30 கோடிக்கும் ஹ்ரித்திக் வாங்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago