'சீரியஸ் மேன்' படத்தில் தன்னுடன் நடித்துள்ள மாஸ்டர் அக்ஷத்தை நவாசுதீன் சித்திக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்திருந்தவர் மாஸ்டர் அக்ஷத். அந்தப் படத்தில் விஜய்யுடன் சில முக்கியக் காட்சிகள், பாடலில் எல்லாம் நடித்திருப்பார்.
தற்போது நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து 'சீரியஸ் மேன்' என்னும் படத்தில் அக்ஷத் நடித்துள்ளார். சுதீர் மிஸ்ரா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக்கின் மகனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாஸ்டர் அக்ஷத்.
இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் தன்னுடன் நடித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் நவாசுதீன் சித்திக்.
» 'நிசப்தம்' படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?- ரசிகரின் கேள்விக்கு மாதவன் பதில்
தற்போது அக்ஷத்துடன் நடித்தது குறித்து நவாசுதீன் சித்திக் கூறியிருப்பதாவது:
"அக்ஷத்தை ஒரு குழந்தையாக நடத்தக் கூடாது என்பதை என்றுமே அவன் எனக்கு உணர்த்தியிருக்கிறான். இயக்குநரின் பார்வையில் விஷயத்தைப் புரிந்துகொள்ளும் அழகான திறன் அவனுக்கு இருக்கிறது. அவனது இந்தக் குணம் அவன் முன் என்னைச் சரணடைய வைத்துவிட்டது".
இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago