பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரரும், இயக்குநருமான அனில் தேவ்கன் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.
ரிஷி கபூர், அஜய் தேவ்கன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜு சாச்சா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனில் தேவ்கன். இவர் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர். அதற்கு முன்பாக ‘ஜீத்’, ‘ஜான்’, ‘இதிகாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘ராஜு சாச்சா’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ப்ளாக் மெயில்’, ‘ஹால்-இ-தில்’ உள்ளிட்ட படங்களையும் அனில் தேவ்கன் இயக்கினார். இறுதியாக 2012 ஆம் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தில் கலை இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு அனில் தேவ்கன் எந்தப் படத்திலும் பணிபுரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனில் தேவ்கன் நேற்று (07.10.20) மரணமடைந்தார். இதை அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தன் சகோதரருடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அஜய் தேவ்கன், “நேற்று இரவு என் சகோதரர் அனில் தேவ்கனை நான் இழந்துவிட்டேன். அவரது மறைவு எங்கள் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரார்த்தனைக் கூட்டத்தை நாங்கள் நடத்தப் போவதில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அனில் தேவ்கனின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago