சுஷாந்துக்கு எதிராக சதி செய்த நபர்கள் யார்? - கங்கணா கேள்வி

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் மரணம் தற்கொலைதான் என்ற எய்ம்ஸ் அறிக்கைக்கு நடிகை கங்கணா மறுப்பு தெரிவித்துள்ளார்.

துடிப்பான இளைஞர்கள் திடீரென ஒருநாள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. தான் துன்புறுத்தப்பட்டு படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், உயிருக்கு பயந்ததாகவும், கூறியுள்ளார். மேலும் பாலிவுட் மாஃபியா கும்பல் தன்னை படங்களில் நடிப்பதிலிருந்து தடுத்ததாகவும், தன் பொய்யான பாலியல் குற்றம் சுமத்தியதால் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சமீபமான நடக்கும் விஷயங்களிலிருந்து சில கேள்விகள் எழுகின்றன.

1) சுஷாந்த் தொடர்ந்து பெரிய திரைப்பட நிறுவனங்கள் தன்னை புறக்கணிப்பதாக கூறிவந்தார். அவருக்கு எதிராக சதி செய்த அந்த நபர்கள் யார்?

2) அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்று ஊடகங்கள் ஏன் தவறான செய்தியை பரப்பியது?

3) மகேஷ் பட் ஏன் மனநல பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தார்?

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்