திருமணமான 10 நாட்களிலேயே கணவர் மீது பூனம் பாண்டே போலீஸில் புகார்

By ஐஏஎன்எஸ்

திருமணமான 10 நாட்களிலேயே தன் கணவர் சாம் பாம்பே மீது நடிகை பூனம் பாண்டே போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கவர்ச்சியான புகைப்படங்கள், காணொலிகள், அதிரடியான சவால்கள் என சமூக ஊடகத்தில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புபவர் பூனம் பாண்டே. இந்தியில் 'நாஷா' என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் திரைப்படங்களைத் தாண்டி இணையத்தில் இவர் உருவாக்கும் சலசலப்பினால்தான் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை பூனம் பாண்டே காதலித்து வந்தார். இவர்களுக்குக் கடந்த 10 ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பூனம் - சாம் ஜோடி கோவாவில் தங்கள் தேனிலவைக் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் தனது கணவர் சாம் மீது பூனம் பாண்டே, கோவா போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சாம் தன்னை அறைந்ததாகவும், தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பூனம் பாண்டேவின் புகாரையடுத்து சாம் பாம்பே மீது கோவா போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்