அனுராக் மீது நடிகை பாயல் கோஷ் போலீஸில் புகார்

By ஐஏஎன்எஸ்

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும் அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாயல் கோஷ் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்திருந்தார்.

பாயல் கோஷின் வைத்திருக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று அனுராக் காஷ்யப்பின் வழக்கறிஞர் பிரியங்கா கிமானி அறிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாயல் கோஷின் வழக்கறிஞர் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று இரவு 8 மணிக்கு பாயல் வீட்டுக்கு நான் செல்லவுள்ளேன். அங்கிருந்து 9 மணியளவில் நாங்கள் ஓஷிவாரா காவல்நிலையம் அனுராக் மீது புகாரளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்