என் மீது பாயல் கோஷ் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அனுராக் காஷ்யப் மறுப்பு

By செய்திப்பிரிவு

நடிகை பாயல் கோஷ் வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும் பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (20.09.20) குற்றம்சாட்டியிருந்தார்.

பாயலின் இந்த புகாருக்கு நடிகை கங்கணா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாயல் கோஷின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளா. இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

வாவ், என் வாயை அடைப்பதற்கு எடுத்த நீண்டகால முயற்சி இது. பரவாயில்லை. என்னை அமைதியாக்கும் முயற்சியில், நீங்கள் இன்னும் சில பெண்களையும் இந்த பிரச்சினைக்குள் இழுத்துள்ளீர்கள். வரம்புகளுடன் நடந்து கொள்ளுங்கள் மேடம். நீங்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை.

என் மீது குற்றம் சாட்டும் சாக்கில் பச்சன் குடும்பத்தையும் இன்னும் சில நடிகர்களையும் இதற்குள் இழுக்க முயற்சித்து தோற்று விட்டீர்கள். நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன் மேடம், அது குற்றமென்றால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன், நிறைய காதல் செய்திருக்கிறேன், அதையும் கூட ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய முதல் மனைவியாகட்டும், இரண்டவது மனைவியாகட்டும், அல்லது வேறு காதலிகளாகட்டும், அல்லது என்னுடன் பணி புரிந்த நடிகைகள், அல்லது பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ நான் சந்திக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதும் இல்லை அதை பொறுத்துக் கொள்வதும் இல்லை.

என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். எது உண்மை எது பொய் என்று உங்கள் வீடியோவை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். உங்கள் ஆங்கில கேள்விக்கு இந்தியில் பதிலளித்தற்கு மன்னிக்கவும்.

இவ்வாறு அனுராக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்