இரண்டு புதிய, பிரபல நாயகிகளும், ஒரு முன்னணி நடிகரின் நண்பரான ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும் போதை மருந்து தடுப்புப் பிரிவின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி விசாரணையின் போது இவர்களது பெயர்களைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான விசாரணையில், அவரது இறப்பில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. போதை மருந்து தடுப்புப் பிரிவினர் ஏற்கனவே ரியாவின் சகோதரர் ஷௌவிக்கை கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ரியாவையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், தன்னுடனும், சுஷாந்துடனும் மூன்று பெண் நண்பர்கள் போதை மருந்து உட்கொண்டதாக ரியா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு நாயகி சுஷாந்தின் நண்பர், மற்றவர்கள் ரியாவின் நண்பர்கள். மேலும் இந்த விசாரணையில், பாலிவுட்டில் 80 சதவீத நட்சத்திரங்கள் போதை மருந்து பழக்கம் உடையவர்கள் என்று ரியா கூறியுள்ளார். இந்த போதை மருந்து சர்ச்சை தொடர்பாக மேலும் 25 பாலிவுட் நட்சத்திரங்களை அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரியா தனது வாக்குமூலத்தில், சுஷாந்துக்காக போதை மருந்து வாங்கியதையும், பணப் பரிவர்த்தனைகளைக் கையாண்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிராண்டா, திபேஷ் சாவந்த், ஷௌவிக் சக்ரபர்த்தி ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
» ‘சிறிய’ நடிகர்கள் என்று யாருமே கிடையாது - பூஜா பட்
» மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட 'வொண்டர் வுமன்' ரிலீஸ் - க்றிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது
"இந்த டெலிவரிகளை சுஷாந்தின் உதவியாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு டெலிவரியும், அதற்கான பணமும் ரியாவுக்குத் தெரிந்தே நடந்தது. சில நேரங்களில் பணம் மற்றும் என்ன போதை மருந்து வேண்டும் என்பது பற்றிய முடிவுகளை ரியாவே எடுத்தார்" என்று ஷௌவிக் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago