நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (29.08.20) சனோஜ் மிஸ்ரா என்பவர் இயக்கும் ‘ஷஷாங்க்’ என்ற படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலானது. ஒரு இளம் நட்சத்திரத்தின் மர்ம மரணமும், பாலிவுட்டின் வாரிசு அரசியலும் என்ற தலைப்போடு சமூக வலைதளங்களில் விளம்பரத்தப்பட்டது. இதனடிப்படையில் இந்த படம் சுஷாந்த் தற்கொலையை பற்றியது என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுஷாந்த்தின் சகோதரி ஸ்வேதா சிங் ‘இந்த படத்தையும் அதை விளம்பரம் செய்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளா.
ரோர் புரொடக்ஷன்ஸ் சார்பில் மாருத் சிங் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யா பாபர், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பாட்னா, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago