‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் அக் ஷய்குமார்

By செய்திப்பிரிவு

டிஸ்கவரி ஆங்கில டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாக உள்ளது.

காடு, மலை, பாலைவனம் போன்ற அபாயகரமான இடங்களில் பயணம் மேற்கொண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி என்பதை அடிப்படையாக கொண்டது இந்த நிகழ்ச்சி. சாகச பிரியரான பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நெருக்கடிகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி என்பதை செய்து காட்டுவது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

உலகளவில் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் ஏற்கனவே வழங்கி இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவுடன் இணைந்தும் பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கி உள்ளார். அதே போல் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.
தற்போது பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாருடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

பாலிவுட்டில் மிகப் பிரபலமாக இருக்கும் அக் ஷய் குமார், இந்தியா முழுவதும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து உருவாக்கப்பட்ட பிஎம்கேர்ஸ் நிதிக்கு ரூ.25 கோடியை அக் ஷய் வழங்கினார். அண்மையில் அசாம் மாநிலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ரூ.1 கோடியை வழங்கினார்.

தற்போது பியர் கிரில்ஸ் நிகழ்ச்சிக்காக மைசூருவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்