கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியன்று சுவாசப் பிரச்சினை, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், தன் உடல் நலனைக் கவனித்துக் கொள்ள நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
அவரது குடும்பத்திலிருந்து எந்தத் தகவலும் மேற்கொண்டு வரவில்லை என்றாலும் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திரைத்துறையைச் சேர்ந்த கோமல் நட்டா பகிர்ந்தார். தற்போது இதற்கான சிகிச்சை மும்பையில் சஞ்சய் தத்துக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சைக்கு முன்பு 'சடக் 2' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை சஞ்சய் தத் முடிக்கவுள்ளார். இந்தப் படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர இன்னும் 5 படங்களில் சஞ்சய் தத் நடித்துள்ளார். அவை பற்றிய ஒரு பார்வை:
சம்ஷேரா
இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஆனால் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் முழு ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் சஞ்சய் தத் இப்போதைக்கு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. எனவே அவர் மீண்டும் ஆரோக்கியமாகும் வரை சம்ஷேரா தரப்பு காத்திருக்க வேண்டும். கரண் மல்ஹோத்ரா இயக்க யாஷ்ராஜ் தயாரிக்கும் இந்த வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில் ரன்பீர் கபூரும், வாணி கபூரும் நடிக்கின்றனர்.
பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா
'சடக் 2' போலவே ஓடிடி தளத்தில் இந்தப் படமும் வெளியாகவுள்ளது. இதில் அஜய் தேவ்கன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாக். யுத்தம் பற்றிய படம் இது. இந்தியா இந்தப் போரில் வெற்றி பெற, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்தியாவுக்கு உதவிய 300 கிராமத்துப் பெண்கள், இந்திய விமானப் படை விமானி விஜய் கார்னிக்கின் முயற்சி ஆகியவற்றை விவரிக்கும் கதை. இன்னும் சிறிய பகுதி படப்பிடிப்பு மீதம் உள்ளது. அது விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் துதையா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா, நோரா ஃபதேஹி, ஷாரத் கெல்கார் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப் 2
2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தின் இரண்டாம் பாகமான இதில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இந்த வருட அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடி, ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிய பகுதி படப்பிடிப்பும், டப்பிங்கும் சஞ்சய் தத்தை வைத்து முடிக்கப்படவுள்ளது. கன்னடத்தில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரவீனா டன்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரித்விராஜ்
ஒய்.ஆர்.ஃப் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பான இதில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். 2017 உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார் சம்யோகிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரித்விராஜ், சம்யோகிதா இடையேயான காதலுக்கு இருந்த வரலாற்று முக்கியத்துவம் குறித்துப் பேசும் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
டோர்பாஸ்
ஓடிடியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். நர்கீஸ் ஃபக்ரி, ராகுல் தேவ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கிரீஷ் மாலிக் இயக்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago