பிரபாஸை இயக்கும் தன்ஹாஜி இயக்குநர்: 3டி-ல் உருவாகும் ஆதிபுருஷ்

By செய்திப்பிரிவு

'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்தாண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் 'தன்ஹாஜி'. அஜய் தேவ்கான் நாயகனாக நடித்த இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கியிருந்தார். வசூல் ரீதியாக பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தை அஜய் தேவ்கான், பூஷண் குமார் மற்றும் கிஷண் குமார் இணைந்து தயாரித்து வெளியிட்டார்கள்.

தற்போது ஓம் ராவத் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமாரே தயாரிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் 3டி-ல் உருவாகிறது. இந்தியில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்துக்கான போஸ்டரை வைத்துப் பார்த்தால், இது 'ராமாயணம்' கதையில் இருந்து ஒரு பகுதியை படமாக்கவுள்ளதாக தெரிகிறது.

2021-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2022-ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸ், பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வரிசையில் 'ஆதிபுருஷ்' படமும் இணைந்துள்ளது.

ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் உருவாகும் 'ராதே ஷ்யாம்', நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஓம் ரவுத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்