இயக்குநரும் நடிகருமான நிஷிகாந்த் கமத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம்’, ஜான் ஆபிரகாமின் ‘ஃபோர்ஸ்’, ‘ராக்கி ஹேண்ட்ஸம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய்வர் நிஷிகாந்த் கமத். 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘டோம்பிவாலி ஃபாஸ்ட்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை தமிழிலும் மாதவனை வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது தவிர ஏராளமான திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிஷிகாந்த் ஹைதரபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (12.08.20) மீண்டும் கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிஷிகாந்த்.
» ‘மண்ணுக்கு மரம் பாரமா’ பாடலை எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி மறைவு
» கமல்ஹாசனின் திரைப்பயண சாதனை- ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி 61 ஆண்டு நிறைவு
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிஷிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago