நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சஞ்சய் தத், உடல்நலம் சீராகி நேற்று (ஆகஸ்ட் 10) வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக நேற்று தன் சமூக வலைதளப் பக்கங்களில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத் 3ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்